எண்ணிக்கையால் தோற்கடிக்கப்பட்டாலும் எனது அரசியல் சித்தாந்தம் வெல்ல முடியாதது

எண்ணிக்கையால் தோற்கடிக்கப்பட்டாலும் தனது அரசியல் சித்தாந்தம் வெல்ல முடியாதது, என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 குடும்பங்களை விட நாடாளுமன்றத்திற்கு வெளியே வாழும் 5.8 மில்லியன் குடும்பங்களைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி தேர்தலில் நிற்க தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தம்மை நம்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க