உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முருகேசு சந்திரகுமார்

தேர்தல் கூட்டாக இல்லாமல் தொடர்ந்து பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்தும் கூட்டணியாக செயற்பட தீர்மானித்து இருக்கின்றோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை இன்று கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் செலுத்தியுள்ளார்.

இவ்வாறு கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பொருட்டு சமத்துவ கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் இன்று பகல் ஒரு மணிக்கு மூன்று சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

அதாவது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலே ஏழு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன தமிழ் மக்கள் பரவலாக ஒற்றுமை பற்றியும் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அவர்களது அபிலாசைகளின் அடிப்படையில் இது ஒரு தேர்தல் கூட்டாக அல்லாமல் தொடர்ந்தும் பயணிக்கக் கூடிய ஒரு அரசியல் கூட்டாக தமிழ் மக்களின் அடிப்படை நாளாந்தப் பிரச்சனை உட்பட தமிழ் மக்களினுடைய அடிப்படை அபிலாசைகளை தொடர்ந்தும் கூட்டணியாக முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்து இருக்கின்றோம்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் இன்று இந்த மூன்று சபைகளுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தி இருக்கின்றோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24