உலகின் மிக வயதான மனிதர் காலமானார்!
உலகின் மிக வயதான மனிதர் நேற்று செவ்வாய்க்கிழமை தனது 112 வயதில் காலமானார்.
இங்கிலாந்தின் சவுத்போர்ட் பராமரிப்பு இல்லத்தில் வசித்து வந்த ஜோன் டினிஸ்வுட் (John Tinniswood) என்ற குறித்த நபர் அந்த பராமரிப்பு இல்லத்திலேயே காலமானதாகக் கூறப்படுகிறது.
இவர் 1912ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லிவர்பூலில் பிறந்தார்.
1942 இல் திருமணம் செய்து கொண்ட இவர் இரண்டு உலகப் போர்கள் மற்றும் இரண்டு பெருந் தொற்று நோய்களிலிருந்து உயிர் தப்பியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன