உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இருந்து ஹார்டிக் பாண்டியா விலகல்
உலகக் கிண்ண கிரிக்கட் தொடரில் இருந்து இந்திய அணியின் சகல துறை வீரர் ஹார்டிக் பாண்டியா விலகியுள்ளார்.
பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற போட்டியின் போது, அவர் உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.
எனினும் அவர் அடுத்த வாரம் இந்திய அணியுடன் இணைந்துக் கொள்வார் என இந்திய கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.
அவருக்குப் பதிலாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரடிஷ் கிருஷ்ணா குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தியா அணி நாளை ஞாயிற்றுக்கிழமை தென்னாபிரிக்க அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்