
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை
பதுளை – திபுல்பலஸ்ஸ ஹெபர ஏரிக்கு அருகில் காட்டு யானையின் சடலம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திபுல்பலஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.
10 முதல் 15 வயதுடைய 8 அடி உயரமுள்ள இந்த காட்டு யானை நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் கூறினர்
குறித்த காட்டு யானையின் மரணம் தொடர்பிலான விசாரணைகளை மஹியங்கனை யானை கட்டுப்பாட்டு பிரிவின் வனவிலங்கு உதவி கட்டுப்பாட்டாளர் ஆர்.ஆர்.விஜேசூரிய மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரேத பரிசோதனை நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Beta feature
Beta feature
Beta feature