உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள க.பொ.த  உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க  கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய பரீட்சை ஆணையாளர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.

இவ்வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றவிருக்கும் மூன்று மாணவர்களினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன இந்த மனுவிற்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி கோரியுள்ளார்.

குறித்த பாடத்திட்டங்கள் உரிய முறையில் உள்ளடக்கப்படவில்லை எனவும், இருந்த போதிலும் எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி முதல்  உயர்தரப் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்