
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி கிளிநொச்சி மாவட்டத்தின் கட்டுப்பணத்தை செலுத்தியது
-கிளிநொச்சி நிருபர்-
ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி (EPDP)கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணத்தை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியது.
கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான வைத்தியநாதன் தவநாதன் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தினார்.
கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தினை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை செலுத்தியிருந்தனர்.
கடந்த முறை போன்று தனித்து போட்டியிடவுள்ளதாகவும் பொதுஅமைப்புக்கள் சார்ந்தோர் உட்பட பலர் போட்டியிடவுள்ளதாகவும் சுகந்திரமானதும் ரீதியான தேர்தலை நடாத்துவதற்கு தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தெரிவித்தார்.