இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

-யாழ் நிருபர்-

கடந்த சில தினங்களுக்கு முன்னர், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி, இடமாற்றத்தில் சென்ற பொலிஸ் அதிகாரியின் மகனை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பொலிஸ் அதிகாரியின் மகன் வழக்கு ஒன்றினை இல்லாது செய்வதற்காக 20 ஆயிரம் ரூபாவினை பொதுமகன் ஒருவரிடம் இலஞ்சமாக பெற்றார்.

இது குறித்து யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அந்தவகையில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டது. இது இவ்வாறு இருக்கையில் குறித்த வழக்கானது இன்றையதினம் திங்கட்கிழமை பொலிஸாரால் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் கைது செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24