இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சி.ஐ.டி யில் மற்றுமொரு முறைப்பாடு!
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை தேசிய தொலைக்காட்சி ஒன்றில் ஒலிபரப்பான ஹாட் டோக் அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைத் தெரிவித்தாக குறிப்பிட்டு, குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற சம்பிரதாயத்திற்கு ஏற்ற வகையில் உறுப்பினர்கள் நடந்து கொள்ள வேண்டும் என கெஃபே எனப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கின் தெரிவித்துள்ளார்.