இரண்டாவது நாளாக தொடரும் ருஹூனு பல்கலைக்கழக பணிப்புறக்கணிப்பு

ருஹூனு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இரண்டாவது நாளாக இன்று புதன் கிழமையும் தொடர்கிறது.

ருஹூனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அந்தப் பதவியிலிருந்து நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில், சாதகமான தீர்வு எட்டப்பட்ட போதும் அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவி நீக்கம் செய்யப்படும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் என கல்விசார் மற்றும் கல்விசாரா தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.