
இன்று முதல் விசேட ரயில் சேவை!
பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தினை முன்னிட்டு இன்று புதன்கிழமை முதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலும் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முதலாவது ரயில் இன்றைய தினம் அடங்களாக 14, 16, 21, 23, 28 மற்றும் 31 திகதிகளில் இரவு 7.30 இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிப் பயணிக்கவுள்ளது.
இரண்டாவது ரயில் குறித்த தினங்களில் மாலை 5.20 இற்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கவுள்ளது.
மூன்றாவது ரயில் நாளை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தினசரி காலை 5.30 இற்கு கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும், நான்காவது ரயில் குறித்த தினங்களில் பிற்பகல் 1.50 இற்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் சேவையினை முன்னெடுக்கவுள்ளது.