
ஆர்ப்பாட்டத்தின் போது அணிந்திருந்த ஆடை காரணமாக கைது செய்யப்பட்ட நபர்
ஜுன் மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது இலங்கை பாதுகாப்பு படையினரின் உடையை போன்ற உடை அணிந்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர் இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவம் ஆகிய இரண்டும் அடங்கிய உடையை அணிந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 09 ஆம் திகதி கோட்டையில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இந்த ஆடையை அணிந்திருந்தார்.
பாதுகாப்பு படையினரின் சீருடை போன்ற ஆடைகளை அணிந்து சட்டவிரோதமாக ஒன்றுகூடிய குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபரை கொழும்பு கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.