ஆசியா கிண்ண சக்கர நாற்காலி மென்பந்து போட்டி : தம்பலகாமத்தை சேர்ந்த வீரர் பங்கேற்பு
-கிண்ணியா நிருபர்-
ஆசியாக்கிண்ண சக்கர நாற்காலி மென்பந்து சுற்றுப்போட்டியானது நேபாளம் நாட்டின் கத்மண்டு நகரில் இடம் பெற்றது.
இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி தம்பலகாமம் கல்மெடியாவ தெற்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான டபிள்யூ.பிரியந்தகுமார இதில் பங்கேற்றார்.
ஒக்டோடபர் 4-9 வரை நேபாளம் நாட்டில் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம் பெற்ற சக்கரநாற்காலி ஆசிய கிண்ணத்தில் 2ம் இடத்தை இலங்கை அணியினர் பெற்றுக் கொண்டனர்.
குறித்த மாற்றுத் திறனாளியான பிரியந்தவுக்கான நினைவுச் சின்னம் மற்றும் பதக்கம் போன்றனவும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்