அம்பாறையில் பொலிஸ் நிலையத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட உப பொலிஸ் பரிசோதகர்

அம்பாறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 56 வயதுடைய ஒருவராவார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் தற்போது அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் கண்டறிப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.