அமெரிக்காவின் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலி!

அமெரிக்காவின் கெண்டகியில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் ஓட்டுநர் உரிமம் பதிவு அலுவலகம் உள்ளது.

இந்த அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் இடம் அருகே நேற்று மாலை சிலர் நின்று கொண்டிருந்ததாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு வந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார், இதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க