
தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா
-மஸ்கெலியா நிருபர்-
“ஒற்றுமையை விதைப்போம் நாட்டிற்கு அறுவடை செய்வோம்” எனும் தொனிப்பொருளில்
தேசிய இளைஞர் சேவை மன்றமும், இலங்கை இளைஞர் சங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய இளைஞர் தைப்பொங்கல் விழா, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் திலிந்து சமன் ஹென்நாயகவின் பங்கேற்புடன் நேற்று சனிக்கிழமை அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம் பெற்றது
காலை 6 மணிக்கு ஆலயத்தில் விசேட பூஜையும் அதன் பின்னர் தமிழ் பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
இந் நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் திலிந்து சமன் ஹென்நாயக, நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி, அட்டன் டிக்கோயா நகரசபை தலைவர் அசோக,
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் / இலங்கையின் இளைஞர் அலுவல்கள் தொடர்பான பொது இயக்குநர் சட்டத்தணி சுபுன் விஜேரத்ன, இளைஞர் சங்க கூட்டமைப்பின் அதிகாரிகளும், இளைஞர்களும் ஆலய பரிபாலன சபையினரும் கலந்து கொண்டார்கள்.
