UPDATE தென்கொரிய விமான விபத்து : உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரிப்பு!

தென் கொரியாவிலுள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி, தென்கொரிய – முவான் சர்வதேச விமான நிலையத்தின் சுவரில் மோதுண்டுள்ளது.
விபத்துக்குள்ளான போது, குறித்த விமானத்தில் 175 பயணிகளும், 6 பணிக்குழாமினரும் இருந்ததாக தென்கொரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

தொடர்புடைய செய்தி : ஓடுபாதையிலிருந்து விலகி தரையில் மோதி விமானம் விபத்து : 23 பேர் பலி!