Sri Lanka Tamil News Site

புதையல் தோண்டிய தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட ஆறு பேர் கைது

- Advertisement -

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-அபயபுர பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- Advertisement -

திருகோணமலை பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அபயபுர- லெனின் மாவத்தையில் நேற்று சனிக்கிழமை வீடொன்றில் புதையல் தோண்டி கொண்டிருந்த போது வீட்டு உரிமையாளர் உட்பட ஆறு பேரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கந்தளாய்-காலி -மீகமுவ மற்றும் அம்பாறை தீகவாபி பகுதிகளைச் சேர்ந்த 22,  24, 28 , 35  வயது உடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் ஆறு பேரையும் திருகோணமலை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக  உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

 

- Advertisement -