விளம்பரப் பலகை வீழ்ந்ததில் 14 பேர் பலி

இந்தியாவின் மும்பை நகரில் விளம்பரப் பலகை வீழ்ந்ததில் 14 பேர் உயிர் இழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் வீசிய திடீர் புயல் காரணமாக விளம்பரப்படுத்தலுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 70க்கு 50 மீற்றர் அளவுடைய பாரிய விளம்பரப் பலகை ஒன்றே இவ்வாறு வீழ்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் பலர் விளம்பரப் பலகைக்கு அடியில் சிக்குண்ட நிலையில் அவர்களை மீட்பதற்கு பணியாளர்கள் பல மணிநேரம் போராடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.