Sri Lanka Tamil News Site

நாட்டின் சில பகுதிகளில் மழை

- Advertisement -

ஊவா மாகாணத்திலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும், சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

- Advertisement -