மலையகத்தில் கலைக்கட்டியுள்ள ‘காமன் கூத்து’ நிகழ்வுகள்

மலையகத்தின் கலை வடிவமான ‘காமன்கூத்து’ தற்போது மலையகத்தின் பல்வேறு இடங்களிலும் ஆரம்பமாகியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாவட்டங்களின் பெருந்தோட்டப்புறங்களில் இந்த கலாசார நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

அந்த வகையில் லிந்துலை என்போல்ட் – கிளன் ஈகல்ட் பிரிவில் காமன் கூத்து நிகழ்வுகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த கலை நிகழ்வு தொடர்ந்தும் எதிர்வரும் 11ம் திகதி வரை இடம்பெறும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.