குளிரான காலநிலைகளில் குழந்தைகளை பாதுகாக்க செய்ய வேண்டியவை

எல்லா சீசனிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை தான். ஆனால் குளிர் காலநிலை குழந்தைகளுக்கு ஆபத்தானது. எனவே வெப்பநிலை குறையும் போது உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தொற்று ஏற்பட்டு காய்ச்சல், சளி, தொண்டை புண் மற்றும் காது வலி உள்ளிட்ட பல சிக்கல்ககளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும்.

தற்போது நாட்டின் பல இடங்களில் மழைபெய்து வந்தாலும் இன்னும் சில வாரங்களில் குளிர்காலம் துவங்க உள்ளது. பெரும்பாலான குடும்பங்களுக்கு குளிர்காலம் என்பது காலநிலையை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் வாய்ப்பை தருகிறது.

எல்லா காலநிலைகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை தான். ஆனால் குளிர் காலநிலை குழந்தைகளுக்கு ஆபத்தானது. எனவே வெப்பநிலை குறையும் போது உங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் தொற்று ஏற்பட்டு காய்ச்சல், சளி, ஜலதோஷம், தொண்டை புண் மற்றும் காது வலி உள்ளிட்ட பல சிக்கல்ககளை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும். இதனை தவிர்க்க வேண்டும் என்றால் குழந்தைகளின் நோயெதிர்ப்பு அமைப்பை வலுவாக வைத்திருக்க வேண்டும்.

எப்போதும் அவர்களை சூடாக வைத்திருங்கள்: குளிர்காலத்தில் குழந்தைகளின் உடல் வெப்பநிலையை பராமரிக்க தொப்பிகள், காலுறைகள் மற்றும் லேசான கம்பளி ஸ்வெட்டர்கள், ஜாக்கெட்ஸ், மஃப்ளர்ஸ், ஹேண்ட் கிளவுஸ் உள்ளிட்டவற்றை தேவைக்கேற்ப போட்டு விடலாம். வெளிப்புற வெப்பநிலை எவ்வளவு குளிராக இருக்கிறது என்பதை பொறுத்து குழந்தையின் தலை மற்றும் மார்பு பகுதியை பாதுகாப்பாக கவர் செய்ய மறக்காதீர்கள். அதே போல குளிர்காலத்தில் உங்கள் குழந்தைக்கு எப்போதும் முழு கை மேலாடை மற்றும் முழு ஆடைகள் போட்டு விடுங்கள்.

நிறைய தண்ணீர் கொடுக்கவும் : குளிர்காலத்தில் அடிக்கும் வறண்ட காற்று காரணமாக ஈரப்பதம் குறைவாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளின் உடல் வேகமாக நீரிழப்புக்கு ஆளாகும். எனவே அவ்வப்போது அவர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கொடுத்து கொண்டே இருங்கள்.

இனிப்புகளை கட்டுப்படுத்துங்கள்: இனிப்பு மற்றும் சர்க்கரை உணவுகள் அதிகம் எடுத்து கொள்வது குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தை சமரசம் செய்கிறது. இதனால் குழந்தைகளுக்கு காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்டபிற நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே உங்கள் குழந்தை அதிகம் இனிப்பு சாப்பிடுவதை கட்டுப்படுத்துங்கள்.

ஆரோக்கிய உணவுகள் : சீரான மற்றும் ஆரோக்கிய உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.மற்ற காலநிலைகளை விட குளிர்காலம் கூடவே அதிக தொற்றுக்களை கொண்டு வருகிறது. எனவே பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் இந்த சீசனில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக அவர்களது டயட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்டஸ் நிறைந்த காய்கறிகள் & பழங்கள் மற்றும் குறிப்பிட்ட மசாலாக்களை சேர்க்க வேண்டும்.

போதுமான தூக்கம் : பொதுவாக எல்லோருக்கும் தூக்கம் மிகவும் முக்கியம். அதிலும் குழந்தைகளுக்கு இன்னும் முக்கியம். ஏனென்றால் போதுமான தூக்கம் நோயெதிர்ப்பு மண்டலத்தில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. தூக்கம் சரியாக இல்லை என்றால் எதிர்மறை விளைவுகள் ஏற்படுகிறது. ஆம், . தூக்கமின்மை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. எனவே தினசரி உங்கள் குழந்தை போதுமான அளவு தூங்குகிறார்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

விளையாட்டு நேரம் : குளிர் காலநிலை என்றாலும் உணவுகளுக்கு அடுத்து குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது உடல் செயல்பாடுகள். எனவே தினமும் மாலை நேரம் குளிர் காலநிலையை அதிகமாவதற்கு முன்னால் ஒரு அரை மணிநேரம் திறந்த வெளி மைதானம் அல்லது பார்க்கில் குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள்.

சுத்தம் முக்கியம்: குழந்தையின் நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாக இருக்க வேண்டும் என்பதால் சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும் அவர்களின் கை சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். தவிர எப்போதுமே குழந்தையின் சுற்றுப்புறம் மற்றும் உடைமைகளை சுத்தமாக பராமரிப்பது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.