Sri Lanka Tamil News Site

அரிய வகை புலி இனம் ஒன்று கண்டுபிடிப்பு

- Advertisement -

THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இனம் திருகோணமலை மூதூர் 64 ஆம் கட்டை ஜபல் நகர் பகுதியில்  பிடிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு பிடிக்கப்பட்ட இப்பூனையை மீன்பிடி பூனை என அழைக்கப்படுவதுடன் வன ஜீவராசிகள் திணைக்களத்தில் ( Department of Wildlife Conservation, Sri Lanka ) ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இப்பகுதியில் நீண்ட காலமாக வீடுகளில் உள்ள கோழி உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில், பொதுமக்களினால் கடந்த டிசம்பர் 2 திகதி அன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்பூனையினால் தாம் பல்வேறு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் ஒரு நடுத்தர காட்டுப்பூனையாக குறிப்பிடப்படுகின்றது.

இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன.

- Advertisement -