Tag: Manithan Tamil News

Manithan Tamil News மனிதன் தமிழ் செய்திகள் 2023 Update விளையாட்டு கலை, கலாச்சார, அரசாங்க தகவல்கள், வேலை வாய்ப்பு, மரண அறிவித்தல், ராசி பலன், சினிமா தகவல்கள்

  • மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட உரிமங்களில் முறைகேடு

    மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட உரிமங்களில் முறைகேடு

    மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட தணிக்கையில் தெரியவந்துள்ளது.

    இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல வெளிநாட்டு பணியாளர்கள் அவற்றைப் பெறவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன கூறுகிறார்.

    கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த அறிக்கை உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • உயர்தர பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

    உயர்தர பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

    2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

    அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன.

    தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

    பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்த்து, மாணவர்கள் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, முப்படை, காவல்துறை உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயல்முறை தொடர்பான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, பரீட்சைக் காலத்தில் ஏற்படக்கூடிய தடைகளை நிர்வகிக்கத் தேவையான வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலையத்தை அடைவதற்கான உதவிகளைப் பெறுவதற்கு சில தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    இதன்படி, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர இலக்கமான 117,

    0113 668020, 0113 668100, 0113 668013, 0113 668010, 076 3 117 117 அல்லது பரீட்சை திணைக்களத்தின் அவசர இலக்கமான 1911 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், அறிவிப்பதன் ஊடாக உடனடியாக நிலைமையைத் தவிர்ப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • புகையிரத  சேவையில் தாமதம்

    புகையிரத சேவையில் தாமதம்

    காலியில் இருந்து கல்கிசை நோக்கிப் பயணித்த புகையிரதமொன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

    பூஸ்ஸ புகையிர நிலையத்திற்கு அருகில், குறித்த புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கரையோர மார்க்கத்திலான புகையிர சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாகக் காலை வேளையில் இயங்கும் அலுவலக புகையிர சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிர திணைக்களம் தெரிவித்துள்ளது.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் விமான சேவைகள் பாதிப்பு

    டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் விமான சேவைகள் பாதிப்பு

    இந்தியாவின் தலைநகர் புது டெல்லியில் காற்றின் தரமானது தொடர்ந்தும் மோசமான நிலையிலேயே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, நேற்று வியாழக்கிழமை காலை டெல்லியின் வளி மாசு சுட்டெண்ணானது 379 புள்ளியாகப் பதிவாகியுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

    டெல்லியிலிருந்து புறப்படும் சில விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அத்துடன், சுவாசக்கோளாறு உள்ளவர்கள், நோயாளர்கள் மற்றும் சிறுவர்களைக் காற்றின் தரம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் இருவர் கைது

    ஐஸ் போதைப் பொருளுடன் கல்முனையில் இருவர் கைது

    -அம்பாறை நிருபர்-

    ஐஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறு பொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

    நேற்று வியாழக்கிழமை இரவு கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

    இதன் போது, கல்முனைக்குடி 9 பிரிவு மதிரிஸா வீதியில் வசிக்கும் 26 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தை 970 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடனும், கல்முனைக்குடி 2 ஆம் பிரிவு கிறீன் பீல்ட் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய சந்தேக நபர் 870 மில்லி கிராம் போதைப் பொருளுடனும் கைதாகினர்.

    கைதான 2 சந்தேக நபர்களையும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும், இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    அத்துடன் கடந்த சில தினங்களாக இப்பகுதியில் ஐஸ் போதைப்பொருட்கள் அதிகளவாக மீட்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • முதியோர்களுக்கு இன்று முதல் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவு!

    முதியோர்களுக்கு இன்று முதல் அஸ்வெஸ்ம நலன்புரி கொடுப்பனவு!

    அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.

    நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதற்கமைய, முதியோர் கொடுப்பனவு பெறும் முதியோர்க்கான 3,000ரூபாய் கொடுப்பனவானது இந்த மாதத்திலிருந்து குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட அந்த சபை தீர்மானித்துள்ளது.

    அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை முதல் குறித்த முதியோர்க் கொடுப்பனவு வைப்பிலிடப்படவுள்ளது.

    அதேநேரம், அஸ்வெசும கொடுப்பனவைப் பெறாத குடும்பத்தில் உள்ள 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்கள் அவர்களின் கொடுப்பனவை, வழமைபோல அஞ்சல் அலுவலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • தரவரிசை பட்டியலில் மஹீஷ் தீக்ஷன முன்னேற்றம்

    தரவரிசை பட்டியலில் மஹீஷ் தீக்ஷன முன்னேற்றம்

    சர்வதேச கிரிக்கட் பேரவையின் அண்மைய, ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையின்படி, மஹீஷ் தீக்ஷன 6 இடங்கள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

    அண்மையில் முடிவடைந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக, தரவரிசையில் 12ஆவது இடத்திலிருந்து 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    மேலும், இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் மஹீஷ் தீக்ஷன ஐந்தாவது இடத்தில் உள்ளதுடன், வனிந்து ஹசரங்க இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    ஒரு இடம் முன்னேறி, வனிந்து ஹசரங்க இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் சகலதுறை ஆட்டக்காரர்களின் தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் மார்கஸ் ஸ்டோனிஸுடன் 4ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை

    பொது சொத்துக்களை சேதப்படுத்தி வன்முறையை தூண்டியவர்களை கைது செய்ய நடவடிக்கை

    மன்னார் பொது வைத்தியசாலையில் இறந்த இளம் தாயின் மரணத்திற்கு நீதி கோரி புதன்கிழமை மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் அமைதியாக இடம் பெற்ற மக்கள் போராட்டத்தில் பொது சொத்துக்களை சேதப் படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்ட நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    குறிப்பாக வைத்தியசாலைக்குள் நுழைந்து கண்ணாடிகளை சேதமாக்கியவர்கள்,பொலிஸார் மீது கற்கள் வீசியவர்கள் ,டயர்கள் உள்ளிட்ட பொருட்களை வீதிகளில் எரித்து மக்களின் போராட்டத்தை திசை திருப்பியவர் களை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

    வைத்தியசாலை சிசிரிவி (CCTV) கேமரா மற்றும் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகளை சேகரித்து அதன் ஊடாக அமைதியான போராட்டத்தை திசை திருப்பி வன்முறை ஆக்கியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை

    சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant ஆகியோருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது.

    இஸ்ரேல் -காசா போரின் போது அவர்கள் நடத்திய போர்க் குற்றங்களுக்காக இந்த பிடியானைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    ” போர்க்குற்றம், கொலை, துன்புறுத்தல் மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்” எனவும் அவற்றை நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது..

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • உணவு ஒவ்வாமை காரணமாக 9 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி

    உணவு ஒவ்வாமை காரணமாக 9 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி

    உணவு ஒவ்வாமை காரணமாகச் சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்த 9 சிறுமிகள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    குறித்த சிறுமிகள் இன்று காலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    அவர்கள் கண்டி, தலாத்து து ஓயாவில் அமைந்துள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் உள்ள 15 – 17 வயதுடைய சிறுமிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் நேற்று புதன்கிழமை இரவு உணவுடன் மரவள்ளிக்கிழங்கு உட்கொண்டுள்ள நிலையில் திடீரென சுகயீனமுற்றுள்ளனர்.

    சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தலத்து ஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்