T20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது நியூசிலாந்து மகளிர் அணி!

10,784

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் மோதின.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி 159 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை நியூசிலாந்து மகளிர் அணி சுவீகரித்துள்ளது.

Sureshkumar
Srinath