Sri Lanka Tamil News Site

சுற்றுலாப் பயணிகளின் வருகையின்மையால் இரத்தினக்கல் தொழில்துறை பாதிப்பு

- Advertisement -

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை மீண்டும் பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் இலங்கையின் இரத்தினக்கற்கள், வைரங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மூலம் 276 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், தற்போது நேரடி ஏற்றுமதிக்கு மேலதிகமாக கொவிட் தொற்றினால் சுற்றுலாப் பயணிகளின் வருகையின்மையினாலும் இரத்தினக்கல் தொழில்துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய பாராளுமன்ற அமர்வில் இது குறித்து மீண்டும் கேள்வி எழுப்பினார்.

பல நாடுகள் இரத்தினக்கல் ஏற்றுமதிக்கு இணையவழி முறையைப் பயன்படுத்தினாலும், இந்நாட்டில் அதற்கான வசதிகள் மிகக் குறைவு எனவும், இதன் காரணமாக இரத்தினக்கல் ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்கள் மட்டுமன்றி, சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கூட கடும் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!