Sri Lanka Tamil News Site

இரண்டு சிலிண்டர்கள் திருட்டு

- Advertisement -

 

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்த எரிவாயு சிலிண்டர் ஒன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இதேவேளை நேற்று மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதுமலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர்  திருட்டு போயுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் வந்து ஒருவர் குறித்த வீட்டிற்குள் நுழைந்து சிலிண்டரை திருடிச்ச சென்றது அருகில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து இன்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மானிப்பாய் பொலிஸார் சி.சி.டி.வி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!