மட்டக்களப்பில் கணபதிப்பிள்ளை மோகனின் முயற்சியில் வீதிகள் புனரமைப்பு

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று பிரதேச கிராமங்களான கொடுவாமடு காளி கோவில் வீதி, பன்குடாவெளி மயான வீதி ஆகிய இரு வீதிகளையும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த வீதிகளை புனரமைத்து தருமாறு ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானிடம் கேட்டுக் கொண்டதிற்கு இணங்க இரு வீதிகளையும் உடனடியாக புனரமைக்க ஆளுனர் உத்தரவு இட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது இரவு வேளை பாராது வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் அளவீட்டு பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.