வார இறுதி நாட்களுக்கான மின்வெட்டு

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

வாரயிறுதியில் 02 மணிநேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்மூலம், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V  மற்றும் W வலயங்களுக்கு  பகல் நேரத்தில் 1 மணி நேர மின்வெட்டு,  இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.