
பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் பெற தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் இலங்கை பொலிஸாரின் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் (Police Clearance Unit ) பிரிவிற்கு தனியான தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொலிஸ் அனுமதிச் சான்றிதழை கோரும் பொதுமக்களின் நலனுக்காக இரண்டு தனித்தனியான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 0112- 439185 (நேரடி), 0112 -013500 பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள பொதுமக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.