பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கை

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் சாவகச்சேரி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யுக்திய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஏ-9 மற்றும் ஏ-32 வீதிகளூடாக பயணித்த வாகனங்களை சோதனையிட்டனர்

பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கு அமைவாக போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்