Sri Lanka Tamil News Site

7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது

- Advertisement -

-மன்னார் நிருபர்-

மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்-யாழ் பிரதான வீதி வெள்ளங்குளம் வீதித் தடுப்பில் சந்தேகத்திற்கிடமான லொறி ஒன்றை மறித்து சோதனையிட்டதில் லொறியில் இருந்து சுமார் 24 கிலோ 200 கிராம் கேரள கஞ்சா அடங்கிய 12 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இதன் போது வவுனியாவை சேர்ந்த 37 மற்றும் 45 வயதான இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் லொறியுடன் இலுப்பைக்கடவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலுப்பைக்கடவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -