-அம்பாறை நிருபர்-
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 46 ஆவது நாளாக இன்று வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக 46 ஆவது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.எனினும் கடந்த தினங்களை விட குறைந்தளவான மக்களே குறித்த போராட்டத்தில் பங்கேற்று வருவதை காண முடிகின்றது.
இவ்விடயம் குறித்து ஏற்பாட்டாளர்களும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை தற்போது எதிர்கொண்டுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்