IPL ஏலம் : சாதனை படைத்த பெட் கம்மின்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை அவுஸ்திரேலிய அணித்தலைவர் பெட் கம்மின்ஸ் பெற்றுள்ளார்.

அவர் 20.5 கோடி இந்திய ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.

ஆரம்பம் முதல் பெட் கம்மின்ஸை வாங்குவதற்கு சென்னை சுப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயஸ் சேலஞ்சர்ஸ் பெங்களுர் ஆகிய அணிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவியது.

இந்தநிலையில் இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20.5 கோடி இந்திய ரூபாய்க்கு பெட் கம்மின்ஸை வாங்கியுள்ளது.