நாளையும் பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் நாளைய தினம் ஞாயிற்று கிழமை 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் எதிர்வரும் சில நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடுமென அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

இதன்காரணமாக கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.