கிழக்கு மகாகணத்தில் இலவச கைத்தொழில் பயிற்சிநெறிகள்: மாதம் 6000 ரூபா கொடுப்பனவு

கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தினால் இப்பகுதியில் உள்ள பிரதேச செயலக பிரிவிலும் காணப்படுகின்ற கிராமிய கைத்தொழில் துறை நிலையங்களில் கைத்தொழில் பயிற்சிநெறிகள் ஆரம்பமாகவுள்ளன.

இலவசமாக இடம்பெறவுள்ள இந்த பயிற்சி நெறியில் 17 வயது தொடக்கம் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ள முடியும் , பயிற்சி காலத்தின் போது மாதாந்தம் 6000 கொடுப்பனவு மற்றும் பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

கிராமிய கைத்தொழில் துறை நிலையங்களில் நெசவு, தும்பு, மரவேலை, தையல்பயிற்சி, பற்றிக் ,தானியங்கி இயந்திரவியல் ,லெதர் ,மட்பாண்டம் தயாரிப்பு போன்ற பயிற்சி நெறிகள் இடம்பெறவுள்ளன.

கால எல்லை 6 மாதம் தொடக்கம் ஒரு வருடம் , கலந்து கொள்ள விருப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோராப்படுகின்றன.

விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ள

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfaU3VETOzQdOXACbaZ4j8XIqMXRREyjAMisCVnxrUwyVARsg/viewform?pli=1