Sri Lanka Tamil News Site

கனடாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து 99 இலட்சம் மோசடி

- Advertisement -

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 99 இலட்சத்துக்கு மேற்பட்ட பணத்தினை மோசடி செய்த பெண் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி, 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா மோசடி செய்ததாக இன்று செவ்வாய்க்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளைச் சேர்ந்த இருவரிடம் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி பொறப்பட்ட 55 இலட்சம் மற்றும் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சித்திரை மாதம் இவ்வாறு பணம் பெறப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -