EPF பெற செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தொடர்பான வேலைகள் செப்டம்பர் முதலாம் திகதி முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

அடுத்த மாதம் முதல் ஈ.பி.எப் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் தமது வருகையை, தொழிலாளர் அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கமான 1958க்கு அழைக்கலாம் அல்லது http://www.appointment.labourdept.gov.lk/  என்ற மின்னஞ்சலில் மூலம் முன்பதிவு செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

சிறந்த சேவை அனுபவத்தை வழங்குவதற்காக வேலையை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் தொழிலாளர் செயலகத்தின் சேவை நோக்குநிலையை நாங்கள் அதிகரிப்போம், என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24