அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

-பதுளை நிருபர்-

பசறை பிபிலை வீதியில் 13 ம் கட்டை 30 ஏக்கர் பகுதிக்கு செல்லும் வீதியில் கீழ் பகுதியில் உள்ள இறப்பர் தோட்டத்தில் 40-45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்

இன்று செவ்வாய்க்கிழமை காலை தோட்ட காவலாளி மற்றும் தோட்ட அதிகாரி இருவரும் இறப்பர் தோட்டத்தை பார்வையிட சென்ற போதே சடலம் கிடப்பதை அவதானித்துள்ளதாகவும், பின்னர் தோட்ட உயர் அதிகாரிக்கு அறிவித்து விட்டு பொலிஸாருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது

சடலம் தற்போது அவ் இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதோடு, நீதிவான் பார்வையிட்டதன் பின்னர் சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனைக்காக பதுளை பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பரிசோதனை மேற்கொள்ளபட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸ் குழுவொன்று மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்