Sri Lanka Tamil News Site

மருமகனால் கத்தியால் குத்தப்பட்டு பெண்ணொருவர் உயிரிழப்பு

- Advertisement -

மத்திய மாகாணத்தின் தெரிபெஹா ஹெலகம பிரதேசத்தில் பெண் ஒருவர் மருமகனால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது 50 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் மகள் பல வருடங்களாக அவருடன் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

- Advertisement -

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச உலர் உணவுப் பொதிகளைப் பெறுவதற்காக இரண்டு பெண்களும் ஹெலகம கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தனர்.

ஆனால் சந்தேக நபரின் பெயரில் பதிவு செய்யப்பட்டதால், மூன்று தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

உலர் உணவுப் பொதிகளை பெற்றுக் கொள்ள தாய்-மகள் இருவரும் முயற்சித்ததால் வாக்குவாதம் முற்றி, சந்தேக நபர் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

படுகாயமடைந்த இரு பெண்களும் தெரிபெஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ரிக்கிலிகஸ்கட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

27 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று வலப்பனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!