உலகளாவிய ரீதியில் மீண்டும் கொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று விகிதம் மீண்டும் அதிகரித்து வருகின்ற நிலையில் இதனால் ஏற்படுகின்ற இறப்பு விகிதங்களும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைப்புகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உலகளாவிய ரீதியில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்து நோய்த்தடுப்பு வழிமுறைகளை மக்கள் மீண்டும் கடைப்பிடிப்பதன் மூலம் தொற்றுகளினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ளலாம் என, சுகாதார அமைப்புகளால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 199 மரணங்கள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.