Sri Lanka Tamil News Site

மட்டக்களப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

- Advertisement -

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் இருந்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பருத்திச்சேனை கன்னன்குடா பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான வினாசித்தம்பி தாமோதரம் (68 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீன்பிடித் தொழிலாளியான குறித்த நபர் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையில், கடந்த 16 ஆம் திகதி பிள்ளைகளுடன் ஏற்பட்ட தகராறினால் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

- Advertisement -

எனினும் இரண்டு நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

அதனைத் தொடர்ந்து மீனவர்கள் மற்றும் உறவினர்கள் தேடிச்சென்ற போது பருத்திச்சேனை கன்னன்குடா ஆற்றுப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போலின் உத்தரவிற்கமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை பார்வையிட்டார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -