மட்டக்களப்பில் ஏழு கிராமங்கள் சேர்ந்து எட்டு பந்தல்கள் இட்டு கண்ணகை அம்மனுக்கு விழா

-கிரான் நிருபர்-

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவில் கோராவெளி எனும் இடத்தில் முல்லை, மருதம் என அமையப்பெற்ற நிலத்தில் மாதுருஒயா ஓடும் நதியில் பாய்ந்தோடும் நீர்அலையின் அருகே அமையபெற்ற இடத்தில் கோராவெளி கண்ணகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

சோழநாட்டு கண்ணகி பாண்டிய நாட்டில் மதுரையை ஏரியூட்டி, வீரபத்தினியாகி சேர நாட்டிலே தெய்வவடிவமாகி, திராவிட பண்பாட்டில் முக்கியத்துவம் பெற்ற சக்தி வழிபாட்டினையே, கிலக்கிலங்கை மட்டக்களப்பில் பல இடங்களில் கண்ணகியம்மனாக வழிபாடுகின்றனர்.

கோராவெளி எனும் இடத்தில் அமையப்பெற்ற கண்ணகிக்கு
1.கிரான்
2.கிண்ணையடி
3.சந்திவெளி
4.கோரகல்லிமடு
5.மிறாவோடை
6.முறக்கொட்டாஞ்சேனை
7.சித்தாண்டி
ஆகிய ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் தனித்தனியாக பந்தல்களும் அமைத்து, அதனுடன் பிரதேச செயலாளர் தலைமையில் கோரகல்லிமடு/சந்திவெளியை சேர்ந்த குடும்பங்கள் சில பந்தல் அமைத்து எட்டு பந்தல்களாக கண்ணகி அம்மனை இங்கு வழிபடுவார்கள்

முதல்நாள் நேர்ப்பு பூசையுடன் ஆரம்பமாகி, அடுத்தநாள் பத்தர்கள் மடிப்பிச்சை எடுத்து தங்கள் நேர்த்தியை பூர்த்தி செய்வார்கள்

அதனை தொடர்ந்து விநாயக பானை எடுக்கப்பட்டு பொதுமக்கள் பொங்கல் பொங்கி, கண்ணகி அம்மன் கடைசி விழாவாகிய குளிர்த்தி படிக்கப்படும், குளிர்த்தி பாடல்கள் கண்ணகையில் உள்ள குளிர்ச்சியை வேண்டி பாடப்படுவதாக ஐதீகம், குறித்த பாடலுடன் குறிந்ந ஆண்டுக்கான கண்ணகியம்மன் வழிபாடு நிறைவு பெறும்.

ஆண்டுக்கொருமுறை இரு நாட்கள் மட்டும் இடம்பெறும் அம்பாளின் நிகழ்வில் பல ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்வதுடன், குறித்த ஆலயத்தின் வரலாறு கிராமிய வழிபாடு ‘தெய்வமாடுதல்’ கட்டுகேட்டல் முறையே நூற்றாண்டு தொட்டு பிரமித்து நிற்கின்றது .

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்