மட்டக்களப்பு, தாந்தாமலை அருள்மிகு முருகன் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்று கிழமை எண்ணெய்காப்பு வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
தாந்தாமலை முருகன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகத்தினை முன்னிட்டு நேற்று காலை 7 மணி தொடக்கம் இன்று மாலை 5 வரையில் இந்த எண்ணெய்காப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அன்னதானம் வழங்கப்பட்டதுடன் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்கத அடியார்கள் கலந்துகொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்