மட்டு . பிரபல பாடசாலையில் இரு மாணவர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றில் இன்று செவ்வாய்கிழமை காலை இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவரொருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரபல ஆண்கள் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும்  இரண்டு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையில் முடிந்துள்ளது ,   இதன் போது  ஒரு அருகில்  நின்று கொண்டிருந்த மாணவனிற்கு மேல் மற்றொரு மாணவன் விழுந்ததில் கீழே விழுந்த மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக,  வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து படுகாயமடைந்த மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.