Sri Lanka Tamil News Site

கசிப்புடன் ஒருவர் கைது

- Advertisement -

-யாழ் நிருபர்-

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அச்செழு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இதன்போது அவரிடமிருந்து 20 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா, 7 ஆயிரம் மில்லிலீட்டர் கசிப்பு மற்றும் கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் போன்றனவும் மீட்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இதன்மூலம் நீண்டநாள் கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -