பாண்டிருப்பில் அறநெறி ஆசிரியைகளுக்கு சீருடை வழங்கி வைப்பு

-கல்முனை நிருபர்-

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தரங்கும், ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீஸன் கலந்து கொண்டார்.

இங்கு அறநெறிப்பாடசாலைகளின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் பதிய பாடத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆகியன இடம்பெற்றதுடன் சீருடையும் வழங்கி வைக்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தில் 94 அறநெறிப்பாடசாலைகள் இயங்கிவருகின்றன. இதில் 575 அறநெறி ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். இவர்களுள் 545 பேர் பெண் அறநெறி ஆசிரியைகள என மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.