மீண்டும் மூடப்படும் எல்ல – வெல்லவாய வீதி

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல – வெல்லவாய வீதி இன்று சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மீண்டும் மூடப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கரந்தகொல்ல – மலித்தகொல்ல பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து குறித்த பகுதியிலிருந்து பெருமளவிலான சேற்று நீர் வெளியேறுவதால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் அறிவித்துள்ளது.