
A-9 வீதியில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
-யாழ் நிருபர்-
பளை முகமாலை A-9 வீதியில் இன்று திங்கட்கிழமை மாலை விபத்து ஒன்று பதிவாகியுள்ளது.
யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
முன்னால் பயணித்த வாகனம் சமிக்ஞை இன்றி மாற்று வீதிக்கு திரும்ப முற்பட்ட வேளை, பின்னால் வந்த இன்னொரு மகேந்திரா வாகனம் மோதி விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தில் வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளான போதும் சாரதிகளுக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பளை போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.