போலி கல்வி நிலையத்தை நடத்தி வந்த 25 வயதுடைய பெண் கைது

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான பாடநெறிகளை வழங்குவதாக பம்பலப்பிட்டியில் மோசடியான கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்த 24 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 27ஆம் திகதி பம்பலப்பிட்டி லொரீஸ் வீதியிலுள்ள என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு தேவையான போலி டிப்ளோமாக்கள் மற்றும் உயர் டிப்ளோமாக்களை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்களை ஈர்த்து, இணையவழி வகுப்புகளை நடத்தி, படிப்பு முடிந்தவுடன் போலி டிப்ளோமாக்களை வழங்கியுள்ளார்.

சரியான உள்ளூர் அல்லது சர்வதேச தரத்தை பின்பற்றாமல் நிறுவனத்தை நடத்திய போதிலும், சந்தேக நபர் பாடநெறியை தொடர்பவர்களிடமிருந்து ரூபா 100,000 முதல் 445,000 வரை பட்டப்படிப்பிற்காக பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் மற்றும் நிறுவனத்திற்கு எதிராக மொத்தம் 43 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், 1000க்கும் மேற்பட்டோர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வி நிலையத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய மட்டக்குளிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனை கைது செய்ய பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.